கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே"
எனக் கவிஞர் வாலி படகோட்டித் திரைப்படத்தில் எழுதிய பாடல் இன்று தமிழக மீனவர்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது.

பண்டைய நாட்களில் மீனவர்களுக்குக் "கடலம்மா" கோபமுற்றால் மட்டுமே இழப்பு வரும். இயற்கைச் சீற்றத்தால் எழும் புயலும் மழையும் அலைகளின் ஆழித் தாண்டவமும் அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும். இப்போது அதிநவீன எந்திரங்கள் பொருத்திய விசைப்படகுகள், திசைமாறிப் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவும் காவல் படகுகள், ஹெலிகாப்டர் தேடுதல்கள் என வசதிகள் பெருகி விட்டதால் உயிர் இழப்புகளைப் பற்றிய கவலை இன்றி நாட்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். ஆனால் தமிழக மீனவனுக்கு மட்டும் இன்னல் தீரவில்லை.
ஆம் அவனது இன்னல் இலங்கைக் கடற்படை வடிவில் தொடர்கிறது.
தமிழ்நாட்டின் காலடியில் கண்ணீர்த் துளிபோல் தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கைத் தீவில் தமிழர்கள் பட்ட, படுகின்ற துயரம் உலகறிந்தது. இலங்கையின் குடிமக்களாக வாழும் ஈழத்தமிழர் மட்டுமின்றி அங்கு பிழைப்புக்காகச் சென்ற இந்தியத் தமிழர்கள்(மலையகத் தமிழர்) கூட விரட்டியடிக்கப்பட்ட கொடுமை நடந்தது.
அலைகடல் நடுவே வளம் செறிந்த மண்ணாக இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியைத் தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்களாய் மாற்ற, இரத்தத்தை வியர்வையாய் விதைத்தவர்கள் மலையகத் தமிழர்கள். இந்தியாவில் இருந்து தோட்டப் பணிக்காக ஆங்கிலேயரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் 'மலையகத் தமிழர்கள்' என அடையாளமிடப்பட்டார்கள். ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து இலங்கை 1948-ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தவுடன், '120 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்கள் இலங்கை மண்ணில் குடியேறினர்' என்று சொல்லி, சிங்கள அரசு மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. மலையகத் தமிழர்களை எப்போதுமே மதித்திராத இலங்கைத்தீவின் மண்ணின் மைந்தர்களான ஈழத்தமிழர்கள் இதைப் பெரிதாக எதிர்க்கவில்லை. மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, அரசுக்கு உடந்தையாக இருந்த பொன்னம்பலம் அமைச்சரானார். இதனால் ஈழத்தின் தந்தை எனப் போற்றப்படும் செல்வா பொன்னம்பலத்திடமிருந்து பிரிந்து சென்றார். மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு.
1964 ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டார நாயக்காவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 9,75,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் மூன்று லட்சம் பேருக்கு மட்டும் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டது. 5,25,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என முடிவானது.. மீதி 1,50,000 பேர் முடிவு ஏதுமின்றி நிர்க்கதியாய் விடப்பட்டனர் என்பது வரலாறு..
இது மட்டுமின்றித் தமிழகத்திலிருந்து வணிகம் செய்வதற்காக இலங்கை சென்ற தமிழர்களைக் கூட இனக்கலவரத்தில் சிங்களர் கொன்றனர்.

தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கவும் வலைகளை உலர்த்தவும் பயன்பட்டு வந்த கச்சத்தீவையும் இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தார் சாஸ்திரிக்குப் பின் பிரதமரான இந்திராகாந்தி.
அதன் பிறகு இலங்கையின் சிங்களக் கடற்படையினரின் அட்டகாசம் தொடங்கியது. தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும் வலைகளை அறுத்தும் மீன்களைக் கொள்ளையடித்தும் இன்னல்களை ஏற்படுத்தினர். அப்போதே இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் சிங்களக் கடற்படைக்குக் குளிர்விட்டுப் போயிருக்காது. ஆனால் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் டெல்லிக்கு ஸலாம் போடும் வேலையைச் செய்வதில்தான் அதிக அக்கறை காட்டினர். தமிழகத்தின் எதிர்ப்பைக் கடுமையான முறையில் மத்திய அரசுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று சிங்களக் கடற்படையால் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்படுவது நடக்குமா?
இந்தியாவிடமிருந்து ராணுவ உதவிகளையும் ஆயுதங்களையும் பெற்றவர்கள் இந்தியாவுக்குப் பரிசாகத் தந்தது மரணங்களையே! தமிழக மீனவர்கள் ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்டோர் இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடலில் எல்லை தாண்டி மீன்பிடிக்க வருவோரைக் கைது செய்வதும் பின்னர் வழக்கு விசாரணைகளும் தூதரக நடைமுறைகளும் முடிந்தபின் அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதுமே உலக நடைமுறை. ஆனால் சிங்களக் கடற்படை மட்டும் தங்களுக்கெனத் தனிச் சட்டத்தை உருவாக்கித் தமிழக மீனவர்களைக் கொல்வதை இந்தியா இன்னும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்த இலங்கைக்கு இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர் சென்றாலும் வெளி உறவுத்துறைச் செயலாளர் சென்றாலும் எல்லாம் கண்துடைப்பு நாடகங்களாகவே முடியும் என்பது கடந்த கால வரலாறு.
இலங்கைக் கடற்படையின் கொலைவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், "வணங்காமுடிபதில்கள்" பகுதியில் சொல்லப்பட்டிருந்தபடி,
"இந்திய அரசு உண்மையான அக்கறையுடனும் முழுமனதுடனும் முயன்றால் இதை நிறுத்தி விடலாம்.
மீண்டும் இதுபோல் இந்திய மீனவர்களைக் கொன்றால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள் பற்றி இலங்கை அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடவேண்டும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையே தெளிவான கடல் எல்லையை வகுத்து, அதை மீனவர்களுக்குத் தெளிவாக அறிவித்துவிட வேண்டும்.
நம் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கைக் கடற்படையினரை இந்தியக் கடற்படை கைது செய்ய வேண்டும்.
தமிழகக் கடலோரங்களில் செயல்படும் கடற்படையில் தமிழர்களான அதிகாரிகளையும் வீரர்களையும் பணியில் அமர்த்த வேண்டும்"
என்பதே தீர்வாகும்.

- ரஸ்ஸல்.
(ரஸ்ஸலின் 